நாகப்பட்டினம் மாவட்டத்தில் 36வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்ற இந்த பேரணியில் காவலர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிந்து பங்கேற்றனர். சாலை விதிகளை முறையாகப் பின்பற்றுவதன் அவசியம், ஹெல்மெட் அணிவது, போன்றவற்றை வலியுறுத்தி இந்தப் பேரணி நடைபெற்றது.