மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவிளையாட்டம் ஊராட்சியில் முக்கியமான நீர் ஆதாரமாக விளங்குவது வீரசோழன் ஆறு. கொடைவிளாகம் பகுதி வழியே செல்லக்கூடிய இந்த ஆற்றுப்படுகையில் இருகரைகளிலும் நாணல் புட்கள், காட்டு செடிகள் வளர்ந்து நீர் போக்குவரத்து செல்ல பெருந்தடையாக உள்ளது. எனவே மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள இந்த நேரத்தில் ஆற்றை விரைந்து தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.