செம்பனார்கோவில்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட காலகஸ்திநாதபுரம் ஊராட்சி மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார். மேலும் இந்த நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமை தாங்கினார். இதில் 90 பயனாளிகளுக்கு வருவாய் துறை, வட்டார வழங்கல் பிரிவுத்துறை, சமூக பாதுகாப்பு துறை, ஊரக வளர்ச்சித்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி