மயிலாடுதுறை மாவட்டத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.