அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் என். குணசேகரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சொந்த வீடு இல்லாதவர்களுக்கு 3 சென்ட் மனை, வீடு மற்றும் நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து, ஆண்டுக்கு 200 நாள்கள் வேலை வழங்க வேண்டும்,
ஒரு நாள் கூலியாக ரூ. 600 வழங்க வேண்டும், இத்திட்டத்தை பேரூராட்சிகளிலும் விரிவுபடுத்த வேண்டும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயத்தை அழிக்கும் வகையில் கார்ப்பரேட் மின் திட்டங்களை தடை செய்ய வேண்டும், மின் திட்டம், இறால் பண்ணைகள் பெயரில் வாங்கப்பட்ட ஆயிரக்கணக்கான விளைநிலங்களை கைப்பற்றி நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரக நுழைவாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
சிபிஐஎம்எல் மாவட்ட தலைமைக்குழு உறுப்பினர்கள் டி. ஆனந்தன், ஏ. லூர்துசாமி, அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் பாலசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.