நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பரவையில் ரூ. 1 கோடியே 16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட காய்கறி விற்பனை சந்தை நேற்று திறக்கப்பட்டது. முதல்வர் மு. க. ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் அறநிலையத்துறைக்கு சொந்தமான பல்வேறு கட்டிடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து பரவை சந்தையில் புதிய கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் நாகப்பட்டினம் மண்டல இணை ஆணையர் குமரேசன், இணை ஆணையர் ராஜாபருதிஇளம்வழுதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.