நாகை: காரில் கடத்த முயன்ற 1.20 லட்சம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல்:

திருக்குவளை அருகே வாகன தணிக்கையின் போது, சுமார் 1,20,000 ரூபாய் மதிப்பிலான 115 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் காரில் கடத்த முயன்றபோது சிக்கியது. ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (41) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து புகையிலை பொருட்கள், கார் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன. நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தல் தொடர்பாக தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி