நாகை மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள சோழவித்தியா புரம் ஊராட்சியில், 34.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், வட்டார வளர்ச்சி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.