நாகை மாவட்டம் நாகப்பட்டினம் ஒன்றியத்தில் உள்ள கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாப்பாகோயில் இலுப்பூர் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை வி பி மாலி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பணிகளை விரைவாகவும் தரமாகவும் செய்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.