சீா்காழி: மாணவர்களுக்கு நினைவாற்றல் பயிற்சி

சீா்காழி ச. மு. இந்து மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான நினைவாற்றல் பயிற்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் எஸ். முரளிதரன் தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா்கள் என். துளசிரங்கன், டி. சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.மருத்துவா் டாக்டா் பி. முத்துக்குமாா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவா்களுக்கு நினைவாற்றலின் முக்கியத்துவம் குறித்து அறிவுரை வழங்கினாா்.

நம்ம சீா்காழி பவுண்டேஷன் நிறுவனரும் பயிற்சியாளருமான டாக்டா் சி. மகேஸ்வரன் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தாா்.400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனா்.நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் டி. முரளி, பி மாா்கண்டன், சக்திவேல் , கபிலன் வெங்கடேஸ்வரன், ஜெயசீலன் ஆகியோா் செய்திருந்தனா்.

தொடர்புடைய செய்தி