மயிலாடுதுறை: வேன் கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி

மயிலாடுதுறை மாவட்டம் தரைமேடு கிராமத்தைச் சேர்ந்த 25 பேர் காரைக்கால் கோவிலுக்குச் சென்றுவிட்டு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர். சீர்காழி அருகே ஆத்துக்குடி கிராமச் சாலையில் வேனின் பின்பக்க டயர் வெடித்ததில், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் முருகன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த 14 பேர் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி