மயிலாடுதுறை: தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-2027 ஆம் கல்வியாண்டில் சேர இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், ஜூன் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 கல்வி உதவித்தொகை, விலையில்லா சீருடை, பாடப்புத்தகம், காலணி, மிதிவண்டி ஆகியவை வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி