மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் கோவில் விசேஷம்

மயிலாடுதுறை திருஇந்தளூரில் உள்ள ஸ்ரீ பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் ஐப்பசி மாத காவிரி துலா உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாள் நடைபெறும் இந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளாக 11ஆம் தேதி கருட சேவையும், 16ஆம் தேதி திருத்தேர் உற்சவமும், அதைத் தொடர்ந்து பெருமாள் காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி