நாகை நகர காவல் சரகத்திற்கு உட்பட்ட மருந்து கொத்தனார் ரோடு பகுதியில் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த பாப்பா கோயில் பகுதியைச் சேர்ந்த சிவா என்பவரை சோதனை செய்தபோது, அவரிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.