நாகப்பட்டினம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த சௌந்தரநாயகி அம்பாள் சமேத நடுவதீஸ்வர சுவாமி கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று (7ம் தேதி) வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 5ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய விழா, தொடர்ந்து புனிதநீர் எடுத்து செல்லுதல், யாகசாலை பிரவேசம், பல்வேறு கால யாகசாலை பூஜைகள் என நடைபெற்றது. நேற்று காலை 4ம் கால யாகசாலை பூஜையைத் தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. இரவில் சுவாமி வீதியுலா நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.