வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காட்டு சுழற்சி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் வழக்கத்தை விட அதிக வேகத்துடன் கரைகளில் மோதி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சின்னூர் பேட்டை, மாணிக்கப்பங்கு, சின்னங்குடி, வானகிரி, பூம்புகார் என பல்வேறு கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.