மயிலாடுதுறை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள 2,83,357 குடும்ப அட்டைதாரர்களில் தகுதி உள்ளவர்களுக்கு மாவட்டத்தில் உள்ள 435 நியாய விலை கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. 

ஜனவரி 7ஆம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்த உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு 13ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுபட்டவர்களுக்கு ஜனவரி 14ஆம் தேதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி