வேளாங்கண்ணி: பெண்ணை தாக்கிய கணவரின் சகோதரர் கைது

வேளாங்கண்ணி போலீஸ் சரகம் ஆரிய நாட்டு வடக்கு தெருவில் வசிக்கும் செந்தில்குமார், தனது சகோதரர் சத்தியசீலன் வீட்டு வாசலில் தண்ணீர் தேங்கியதால் ஏற்பட்ட தகராறில், சத்தியசீலனின் மனைவி கண்ணகியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து செந்தில்குமார் கைது செய்யப்பட்டார். செந்தில்குமார் மற்றும் சத்தியசீலன் இருவரும் ஒரே வீட்டில் மேல் தளத்திலும் கீழ்த்தளத்திலும் வசித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி