ரமலான் நோன்பை முன்னிட்டு ஏழை மக்களுக்கு மளிகை பொருட்கள்

உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்காவில், நாகூர் ஹஜ் சர்வீஸ் நிறுவனத்தின் சார்பில் ரமலான் அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 150 நலிவடைந்த குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட 40 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது. நோன்பின் முக்கியத்துவம், ஒழுக்கம், மனிதநேயம், இஸ்லாத்தின் அமைதி, சகோதரத்துவம் மற்றும் சமூக சேவை குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி