மயிலாடுதுறை மாவட்டம் கடலங்குடி கிராமத்தைச் சேர்ந்த அம்பிகை, தனது நூறாவது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கோலாகலமாக கொண்டாடினார். இந்த விழாவில் அவரது மூன்று மகள்கள், மூன்று மகன்கள், 17 பேத்தியர்கள், 20 கொள்ளுப்பேரன்கள் மற்றும் கொள்ளுப்பேத்திகள், மற்றும் ஒரு எள்ளுப்பேத்தி என மொத்தம் 44 குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த குடும்ப ஒன்றுகூடல் அம்பிகை பாட்டியின் வாழ்வில் ஒரு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.