மயிலாடுதுறை அடுத்த ஸ்ரீகண்டபுரத்தில் குட்லக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்வில் குத்தாலம் தீயணைப்பு மீட்புப்பணி நிலைய அலுவலர் சீனிவாசன் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி செய்முறை விளக்கங்களைச் செய்துகாட்டினார். இதில் பள்ளித் தாளாளர் நசீர் அகமது தானிஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.