சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து பிரதான சாலையில் அமர்ந்து சாலை இன்று(அக்.03) மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சீர்காழி போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி சென்றனர். எனினும் விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

தொடர்புடைய செய்தி