மயிலாடுதுறை: போதை பொருள் வைத்திருந்தவர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் போலீசார் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சிறப்பு அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். பொரையாறு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சோதனை நடத்தியபோது, சங்கரன் பந்தல் உத்திரகுடி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் சட்டவிரோதமாக விற்பனைக்காக குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, கோவிந்தராஜை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி