மயிலாடுதுறையில் அகில இந்து மகாசபை சிவனடியார்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் பங்கேற்ற கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் ராம நிரஞ்சன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சிவனடியார்கள் குளித்தலை ராமலிங்கம், திருச்சி சபாபதி ஆகியோர் பங்கேற்றனர். மேலும் இதில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.