நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இரயில்வே ஆள்சேர்ப்பு வாரியத்தால் (RRB) நடத்தப்படும் தொகுதி – டி தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் 26.02.2026 (வியாழன்) முதல் தினசரி பிற்பகல் 02.00 முதல் மாலை 05.00 மணி வரை சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளன. மேலும், ஒவ்வொரு வாரம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாடத்திட்ட வாரியாக இலவச மாதிரித் தேர்வுகள் நடைபெறும். என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.