சீர்காழி: நூல் வெளியீட்டு விழா

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஜனதா எஸ் இமயவரம்பன் எழுதிய "விடுதலைப் போரில் சீர்காழி" நூல் வெளியீட்டு விழா சுதந்திர போராட்ட தியாகி வ. உ. சிதம்பரனாரின் பேரன் வ. உ. சி. வா. சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் சங்க தலைவர் மார்க்கோனி இமயவரம்பன் முன்னிலை வகித்தார். மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா நூலை வெளியிட முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் முதல்நூலை பெற்றுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி