மயிலாடுதுறை: டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மது விற்பனை; இருவர் கைது

மயிலாடுதுறை அடுத்த பாலியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல அலங்கன் மற்றும் கோனேரிராஜபுரம் பகுதிகளில் செயல்படும் இரண்டு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பாளையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் நடத்திய சோதனையில், இரண்டு கடைகளிலும் தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி