மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆயர்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சமீரா பர்வீன். இவரது கணவர் அப்துல் லதீப் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சமீரா பர்வீன் கும்பகோணத்தில் நடைபெற்ற உறவினர் இல்ல விசேஷத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போழுது வீட்டில் 14.5 சவரன் நகை மற்றும் 70 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை ஜன்னலை உடைத்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.