மயிலாடுதுறை: மது போதையில் பேருந்தை தாக்கிய இளைஞர்கள்

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே அரசலங்குடி கிராமத்தில், பள்ளி மினிபஸ் மாணவர்களை இறக்கிவிட்டபோது, குடிபோதையில் இருந்த மூன்று இளைஞர்கள் பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். அவர்கள் பேருந்தின் கண்ணாடியை கல்வீசி தாக்கியதுடன், வைபர்களையும் உடைத்து மாணவர்களை மிரட்டினர். இதனால் பேருந்தில் இருந்த மாணவர்கள் அச்சமடைந்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி