மயிலாடுதுறை: தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் தீவிரம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகில் உள்ள குட்டியாண்டியூர் கிராமம் கடல் அரிப்பினால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு தடுப்பு சுவர் வேண்டி தமிழக அரசிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தற்போது குட்டியாண்டியூர் கிராமத்தில் கடல் ஓரத்தில் கற்கள் கொட்டி தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோரிக்கை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி