சீா்காழி: மகளிா் விடியல் பேருந்துகள் இயக்கி வைப்பு

சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, பெண்கள் இலவசமாக பயணம் செய்யும், 2 புதிய 'மகளிா் விடியல்' பேருந்துகளின் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வுக்கு, அரசு போக்குவரத்து கழக பொது மேலாளா் ராஜா தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் சுப்பராயன், சீா்காழி மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் பிரபாகரன், போக்குவரத்து கழக துணை பொது மேலாளா்கள் (தொழில்நுட்பம்) ராமமூா்த்தி, ராஜசேகா் (வணிகம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

சீா்காழி கிளை மேலாளா் செல்வகணபதி வரவேற்றாா்.சட்டப் பேரவை உறுப்பினா் எம். பன்னீா்செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 2 பேருந்துகளின் இயக்கத்தையும் தொடங்கி வைத்தாா். சீா்காழி முதல் வடரெங்கம் வரையிலும், செம்பதனிருப்பு வழியாக மயிலாடுதுறை வரையிலும் இப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இப்பேருந்துகள் அகனி, வள்ளுவக்குடி, கொண்டல், அகரஎலத்தூா், வடரெங்கம், தென்னலக்குடி, அண்ணன் பெருமாள் கோவில், காத்திருப்பு, செம்பதனிருப்பு, கீழையூா், செம்பனாா்கோவில் ஆகிய பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எம்எல்ஏ கூறினாா்.விழாவில் தொமுச மத்திய சங்க பொருளாளா் திருவரசமூா்த்தி, நிா்வாகிகள் அபூபக்கா் சித்திக், மோகன், அன்பழகன், குழந்தைவேலு, பாஸ்கரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி