மயிலாடுதுறை: மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வழுதலைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுவர்ணா (33). இவருக்கு நம்பிராஜன் என்பவருடன் நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திடீரென சுவர்ணா காணாமல் போய் உள்ளார். இது குறித்து புகாரின் பேரில் சீர்காழி போலீசார் அவரை தேடி வந்தனர். 

இந்த நிலையில் வழுதலைக்குடி அருகே வாய்க்காலில் மர்மமான முறையில் சுவர்ணா இறந்து கிடப்பதாக தகவல் வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் உடலை மீட்டு இது கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி