மயிலாடுதுறையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை ஒரு மாத காலத்திற்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்காளர்களின் இல்லங்களுக்கு சென்று திருத்தப் பணிகளை மேற்கொள்கின்றனர். இதற்கான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திரு ஸ்ரீகாந்த் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். ஏராளமான பெண்கள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

தொடர்புடைய செய்தி