மதியழகன் தொடங்கிய புதிய கடையால் விஜயலட்சுமிக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விஜயலட்சுமி தனது கணவர் மதியழகனை கொலை செய்ய முடிவு செய்து, 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி தனது அண்ணன் மகன் சத்திரியன் மற்றும் சிறுவனான தனது மகன் ஆகியோருடன் சேர்ந்து மதியழகனை கொலை செய்வது தொடர்பாக சதித்திட்டம் தீட்டியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில், குற்றம் நிரூபணமாகியதைத் தொடர்ந்து, சத்திரியன், விஜயலட்சுமி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி, உத்தரவிட்டார்.
மேலும், அபராதத் தொகையாக தலா ரூ. 1000 செலுத்தவும், அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். விஜயலட்சுமி (48), சத்திரியன் (33) ஆகிய இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். விஜயலட்சுமியின் மகன் தொடர்பான வழக்கு சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.