மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் இடப் பிரச்சனை காரணமாக சுமன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முரளி மற்றும் தர்மராஜன் ஆகியோர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததால், மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.