நாகப்பட்டினம் மாவட்டத்தில் இறைச்சி மற்றும் மீன் வகைகளின் புதிய விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பிராய்லர் கோழி ஒரு கிலோ ரூ.240 ஆகவும், நாட்டுக்கோழி ரூ.500 ஆகவும், ஆட்டுகறி ரூ.1000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீன் வகைகளில், வஞ்சிரம் கிலோ ரூ.1000 - 1200, பாறை மற்றும் கொடுவா கிலோ ரூ.600, வவ்வால் கிலோ ரூ.1200 - 1500 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை பட்டியல் பொதுமக்களின் கவனத்திற்காக வெளியிடப்பட்டுள்ளது.