வேளாங்கண்ணி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஒரத்தூர் வடக்கு தெருவைச் சேர்ந்த குணாளன் மற்றும் செந்தில் குமார் இருவரும் பாண்டிச்சேரியில் கொத்தனார் வேலை செய்து வந்தனர். சம்பளப் பிரச்சனை காரணமாக செந்தில் குமார், அவரது மனைவி ரெஜினா மற்றும் மகன் ராம்குமார் ஆகியோர் குணாளனை ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.