மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா புத்தூர், ஆனந்தகூத்தன் பகுதியில் மேம்பாலம் அமைத்தது குறித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சீர்காழி கோட்டாட்சியர் சுரேஷ், டிஎஸ்பி அண்ணாமலை மற்றும் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இருப்பினும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.