நாகை மாவட்டம் கீழையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சோழ வித்யாபுரம் மெயின் ரோடு பகுதியில் உள்ள அஞ்சலகத்தின் மேற்கூரையை பிரித்து, உள்ளே இருந்த மினி பிரிண்டர், பயோமெட்ரிக் சாதனம், தராசு உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக போஸ்ட் மேன் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.