தருமபுர ஆதீனத்தில் வெளிநாட்டவர்கள் செய்த செயல்

கஜகஸ்தான், ரஷ்யா, உக்ரைன் நாடுகளைச் சேர்ந்த 10 வெளிநாட்டுப் பயணிகள், ஆறு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூர் வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட ஆலயங்களில் தரிசனம் செய்து, நவகிரக ஆலயங்களில் உலக நன்மைக்காக அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். இன்று, மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் உள்ள சைவ ஆதீன மடத்திற்குச் சென்ற இவர்கள், ஆதீன மடாதிபதி ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

தொடர்புடைய செய்தி