உங்க கனவை சொல்லுங்க திட்டத்தினை துவங்கப்பட்டது

தமிழ்நாடு முதலமைச்சர் திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில் 'உங்கள் கனவை சொல்லுங்க' திட்டத்தை காணொளிகாட்சி வாயிலாக துவங்கி வைத்ததை தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என். கௌதமன், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி. பி. நாகை மாலி ஆகியோர் 566 தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை மற்றும் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கினர். இத்திட்டத்தின் கீழ், நாகை மாவட்டத்தில் உள்ள 2,04,306 குடும்ப அட்டைகளிலிருந்து விவரங்களை சேகரிக்கும் கணக்கெடுப்பு பணிகள் 07.01.2026 மற்றும் 08.01.2026 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும்.

தொடர்புடைய செய்தி