மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட காளியப்பநல்லூர் ஊராட்சி அனந்தமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி கோவிலில் தனி சன்னதியில் அமைந்துள்ள திரு நேத்ர தசபூஜை வீர ஆஞ்சநேயருக்கு நேற்று வைகாசி மாத சனிக்கிழமை ஒட்டி சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்காரத்துடன் தீபாரதனை நடைபெற்றது. காலை முதலையே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்