தரங்கம்பாடி: ஜெருசலேம் தேவாலயத்தில் சிறப்பு ஆராதனை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள புதிய ஜெருசலேம் தேவாலயத்தில் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை சிறப்பு ஆராதனை நடைபெறுவது வழக்கம். இதனை ஒட்டி இன்று காலை சபைக்குரு சார்லஸ் எட்வின் தாஸ் சென்ற மாதம் முழுவதும் ஜீவனோடு காத்துக்கொண்ட இயேசு ஆண்டவருக்கு நற்பலி செலுத்தினார். இறுதியில் திரு விருந்து உபசரிப்பில் சபை மக்கள் கலந்து கொண்டு ஜீவன் உள்ள ஆண்டவருக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.

தொடர்புடைய செய்தி