மயிலாடுதுறை: தெற்கு ரயில்வே சார்பில் கோடைகால சிறப்பு ரயில் அறிவிப்பு

பயணிகளின் வசதிக்காக வரும் ஏப்ரல் நான்காம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் தாம்பரம் மற்றும் திருச்சி இடையே கடலூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. திருச்சியில் விடியற்காலை 05: 30 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு வழியாக 12: 30 மணிக்கு தாம்பரத்தை அடையும். மறு மார்க்கமாக தாம்பரத்தில் 03: 45 மணிக்கு புறப்பட்டு இரவு 10: 40 மணிக்கு திருச்சி வந்தடையும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி