மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட் மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட் அங்கீகாரம் பெற்ற உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் வள்ளியை சேர்ந்த 357 மாணவர்கள் தொடர்ந்து எட்டு மணி நேரம் அறிவியல் குறிப்புகளை சொல்லி சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரங்கேஸ்வரி இந்த நிகழ்விற்கு முன்னிலை வகித்தார். மாணவர்களின் சாதனை முயற்சியை அங்கீகரித்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.