வேதாரண்யத்தில் வெள்ளக் காடாக மாறிய உப்பளங்கள்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரண்டாவது நாளாக பெய்து வரும் கனமழை காரணமாக, அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 9 ஆயிரம் ஏக்கர் உப்பளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், கடந்த மாதமே உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது, சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்புகளையும் பனை ஓலைகள் மற்றும் தார்பாய்கள் கொண்டு மூடி பாதுகாத்துள்ளனர். உப்பளங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

தொடர்புடைய செய்தி