மயிலாடுதுறை: மின் விநியோகம் பாதிப்பால் சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல், ராதாநல்லூர், வழுதலைக்குடி புலிட்ட கிராமங்களில் வீசிய பலத்த காற்றால் மின்கம்பங்கள் விழுந்து சேதம் ஏற்பட்டது. இதனால் மின்தடை ஏற்பட்டது. நேற்று (ஜூன் 10) மாலை முதல் இரவு வரை மின் வினியோகம் சீரமைக்கப்படாததால் ஆத்திரமடைந்த மக்கள் திருமுல்லைவாசல் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி