மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையார் அரசு போக்குவரத்து பணிமனை எதிரில் உள்ள சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்து கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் பரவுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் அதிகமாக கொசுக்கள் தொல்லை உள்ளதாகவும் பொதுமக்கள் குறைகூறுகின்றனர். எனவே இந்த சாக்கடையை துர்வாரி சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.