மயிலாடுதுறை நகரின் மையத்தில் அமைந்துள்ள காமராஜர் பேருந்து நிலையத்தைச் சுற்றி உள்ள கடைகளில் மயிலாடுதுறை பகுதியில் பலத்த மழை பெய்த காரணத்தால் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி கடைகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்துடன் இந்த பகுதிக்குச் சென்று வருகின்றனர். மேலும் வணிகர்கள் மழை நீர் உள்ளே புகுந்து பொருட்கள் சேதம் அடைந்ததாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.