சீர்காழி: சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா புத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்தானகோபால் என்பவர் வேறு சிலருக்குச் சொந்தமான இடங்களை போலி ஆவணங்கள் மூலம் தயார் செய்து தனது மனைவிக்குப் பத்திரப்பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டி சீர்காழி தாலுகா கொள்ளிடம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி